மூன்று மாதங்களுக்கு ஈஎம்ஐ வசூலிக்கக் கூடாது! ஆர்பிஐ அதிரடி!

27 March 2020 அரசியல்
sakthikanthadas1.jpg

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு தவணைத் தொகை செலுத்துவதற்கு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை 10 மணியளவில், ஆர்பிஐ நிர்வாக இயக்குநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களால் கடன்களை சரியாகக் கட்ட முடியாது என்பதை, அரசு புரிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனை முன்னிட்டு, பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

வங்கிகளுக்கான ரெப்கோ வட்டி விகதமானது, 4.40% ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வீடு, கார் உள்ளிட்டவைகள் மீதான வட்டியின் அளவும் குறைய உள்ளது. இந்தியாவின் பணவீக்கமானது, கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உறுதிப்படுத்தும். ரிசர்வ் வங்கியின் ஊழியர்களில், 150 பேர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

4.9 சதவிகிதமாக இருந்த ரிவர்ஸ் ரெப்கோ விகிதமானது 4% ஆகவும், 5.15% ஆக இருந்த ரெப்கோ விகிதமானது, 4.40% ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் ஈஎம்ஐ கட்டுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே போல், வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள கடன்களுக்கு, அடுத்த மூன்று மாதம் கழித்து தவணை செலுத்த, வங்கிகள் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

HOT NEWS