இந்தியாவில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க, ரிசர்வ் வங்கியிடம் பணம் கேட்டிருந்தது மத்திய அரசு. அதற்கு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
கடந்த சில மாதங்களாக, பொருளாதார மந்த நிலை அனைத்துத் தொழில்களிலும் நிலவி வருகிறது. இதன் காராணமாக, பல பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கையில், ஈடுபடத் தொடங்கியுள்ளன.
இதன் காராணமாக, உற்பத்தி மற்றும் வியாபாரம் கணிசமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து பிஸ்கட் நிறுவனங்களும், பொருளாதார மந்த நிலையைப் பற்றி கவலைத் தெரிவித்தன. இதனால், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயில் முதலீட்டினை செய்ததால், தங்கம் முற்றும் கச்சா எண்ணெயின் விலை உயர ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் குறித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இயக்குநர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, உபரி நிதியாக தர ஒப்புதல் அளித்துள்ளது.
தற்பொழுது உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் கையிருப்பாக 36 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும், டாலர்கள் மற்றும் தங்கமாகவே அவை இருப்பதால், ரிசர்வ் வங்கியின் நிலைமைப் பாதுகாப்பாக உள்ளது. மேலும், டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கியின் சொத்து மதிப்பும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.