கடந்த நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் பணம் கூட அச்சடிக்கப்படவில்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
கடந்த 2016-2017ம் ஆண்டின் பொழுது நடைபெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து, புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இந்தியா முழுக்க 2000 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில், 2017-2018ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது.
2000 ரூபாய் நோட்டின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றத் தகவலால், இந்தியா முழுக்கப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கு கடந்த ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 2000 நோட்டுக்கள் குறித்தப் புரளியினை யாரும் நம்ப வேண்டாம்.
2000 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றுக் கூறினார். அவர் கூறி ஒரு ஆண்டு ஆவதற்குள், தற்பொழுது புதிய குண்டினை இந்தியாவின் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த நிதியாண்டில், ஒரு 2000 ரூபாய் பணம் கூட அச்சடிக்கப்படவில்லை என கூறியுள்ளது.