முத்ரா கடன் சுமை அதிகரிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநர் கவலை!

27 November 2019 அரசியல்
rbi.jpg

முத்ரா திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் வாராக் கடன்களாக அதிகரித்தது இருப்பதாக, ஆர்பிஐ துணை ஆளுநர் எம்.கே.ஜெயின் கூறியுள்ளார்.

கடந்த 2016 முதல் 2017ம் ஆண்டு வரை, சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 312 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2017 முதல் 2018ம் ஆண்டில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 437 கோடி ரூபாயும், 2018 முதல் தற்பொழுது வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 811 கோடி ரூபாயும் இந்த முத்ரா திட்டத்தின் மூலம், வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த முத்ரா திட்டத்தின் 2015ம் ஆண்டு, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன் மூலம், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, மூன்று பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகின்றது. சிசு என்ற பிரிவின் கீழ் ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலும், கிஷோர் என்ற பிரிவின் கீழ் ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரையிலும், தருண் என்ற பிரிவின் கீழ் ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு வழங்கப்படும் கடன்கள், மீண்டும் வங்கிக்கு திரும்ப வருவதில்லை. கடன் வாங்கியவர்கள், தங்கள் கடனைத் திருப்பி அடைக்க வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால், வங்கிக்கு வர வேண்டிய பணம் சரியாக வராததால், பணப்பற்றாக்குறை உருவாகும் நிலை உள்ளது. இதனால், கடனாகக் கொடுத்தப் பணத்தினை, மீண்டும் வாங்க வங்கிகள் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

HOT NEWS