ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள்

10 May 2019 உடல்நலம்
100.jpg

ஆண்கள் மணப்பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பது அழகு, திறமை மற்றும் வசதியான குடும்பம். ஆனால், இதை விட அதிகமாகப் பெண்கள் தான் திருமணம் செய்யவுள்ள ஆணிடம் எதிர்ப்பார்க்கின்றனர். ஒரு ஆராய்ச்சியில், பின்வரும் விஷயங்களை ஒவ்வொருப் பெண்ணும் தன் கணவனிடம் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஒழுக்கம்

படத்தில் வரும் நடிகர்கள் புகைப்பிடித்தால் ரசிப்பவர்கள், தன் கணவனிடம் அதை விரும்புவதில்லை. அதே சமயம் குடிப்பழக்கத்தையும் பெண்கள் அதிகம் வெறுக்கின்றனர். பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்று தெரிந்து வைத்துள்ள கணவனை மனைவிமார்கள் பெரிய ஹீரோவாகவேப் பார்க்கின்றனர்.

தைரியம் மற்றும் பொறுமை

எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் தைரியமாகவும், அமைதியாகவும் சமளிக்கத் தெரிந்திருந்தால் உங்களை உங்கள் மனைவிகள் சூப்பர் ஹீரோவாகத்தான் பார்ப்பார்கள்.

நல்ல உடல் அழகு

இதுவே முதல் இடம் வகிக்கிறது. கண்டதும் காதல் என்பது இதிலிருந்தே வருகிறது. அழகாக இருப்பவர்களை மனதளவில் நேசிக்க ஆரம்பித்துவிடுவர்.

நிறம்

பொதுவாக சிவந்த (வெள்ளை) நிறமாக இருக்கும் ஆண்களை பெண்கள் கண் இமைக்காமல் பார்ப்பார்கள். மேலும் அழகான உடலையும் நன்னடத்தையும் கொண்டிருப்பவர்களைக் கண்டால் சொல்ல வேண்டாம்.

கவனம்

உங்கள் காதலி அல்லது திருமணம் செய்ய உள்ள பெண் உங்களிடம் பேசும் பொழுது தயவு செய்து காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் கூறுவதற்கு கவனமாக விடையளித்தால் உங்களிடம் அவர்கள் கோபப்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

நேர்மறை எண்ணம்

எப்பொழுதும் உற்சாகமாக, நடப்பதை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஆணை பெண்கள் மதிக்கின்றனர்.

விட்டுக் கொடுத்தல்

திருமணத்திற்கு முன் மணப்பெண்ணிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உங்கள் மேல் மிகப் பெரிய மதிப்பை உருவாக்கும்.

இரகசியங்கள்

உங்கள் மனைவியோ அல்லது காதலியோ உங்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால் அவர் உங்களை நம்புகிறார் என்று அர்த்தம். எனவே, அதைப் பற்றி வேறு யாரிடமும் கூறிவிடாதீர்கள்.

நன்றி

நீங்கள் உங்கள் மனைவியிடனோ அல்லது காதலியுடனோ நன்றி பாராட்டாவிட்டாலும், அவர்கள் முன், மற்றவர்களை நீங்கள் சரியாகப் பாராட்டினால் உங்களைப் பெரிய மனிதராக நினைப்பர்.

திறமை

நல்ல திறமைசாலியாக இல்லாவிட்டாலும், தன்னிடம் உள்ளதை அவர்கள் முன் செய்து அவரை மயக்குவது மிக முக்கியமான விஷயமாகும்.

ஏமாற்றுதல்

மறந்தும் கூட உங்களை விரும்பும் அல்லது நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை விளையாட்டாகக் கூட ஏமாற்றி விடாதீர்கள். அவர்கள் முதலில் சிரிப்பது போல் நடித்தாலும் மனதில் இருந்து அந்த நிகழ்வை மறக்கமாட்டார்கள்.

HOT NEWS