தொடர் நஷ்டம் மற்றும் கடன் காரணமாக, விலை உயர்வில் இறங்கியுள்ளது ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள்.
பொருளாதார மந்த நிலையினால், ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பின்னர், ஐடி நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனங்களில் இருந்து ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டன. இந்நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் மற்றும் நஷ்டத்தின் காரணமாக, ரீசார்ஜ் கட்டணத்தினை ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் அதிகரிக்க உள்ளன.
இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனமான டிராய்க்கு செலுத்த வேண்டியத் தொகை, தொழில் ஏற்பட்ட நஷ்டம் என மொத்தம் 92 ஆயிரம் கோடி ரூபாயினை கட்ட வேண்டிய சூழலில் உள்ளது, இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள்.
இந்த நிறுவனங்களில், ஏர்டெல் நிறுவனத்தினைக் காட்டிலும் வோடாபோன் நிறுவனமே அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார், 54,000 கோடி அளவிற்கு அந்த நிறுவனம் கடும் நஷ்டத்தினை சந்தித்து உள்ளது. மேலும், தங்களுடைய லைசென்ஸ் பணமாக, 8% பணத்தினையும் கட்ட வேண்டி உள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன இந்த நிறுவனங்கள்.
தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் தாங்கள் அளிக்கும் இலவசங்களையும், தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தாமல் வழங்கிக் கொண்டே இருப்பதால், வேறு வழியின்றி, ரீசார்ஜ் கட்டணத்தினைக் கூட்ட உள்ளன ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள்.
இந்த நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, டிராய் நிறுவனம் லைசென்ஸ் பணமாக 8% இருந்து, 5% குறைத்துக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1ம் தேதி அன்று, தங்களுடைய ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளன. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக உள்ளனர் என்பது மட்டும், உறுதியாக நம்பப்படுகின்றது.
www.ndtv.com/business/telecom-stocks-ringing-gains-bharti-airtel-vodafone-idea-surge-2134815