35 ரூபாய்க்கு ஒவ்வொரு மாதமும், கட்டாயம் ரீசார்ஜ் செய்யச் சொல்லி, பல இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறியிருந்தன. ஒருவேளை நீங்கள் 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யாவிட்டால், கண்டிப்பாக, உங்களால் அவுட்கோயிங் கால்களை செய்ய இயலாது. அது மட்டுமின்றி, ஒரு சில நிறுவனங்கள் இன்கமிங் கால்களையும் கட் செய்தன.
இந்நிலையில், தற்பொழுது வோடாபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள், இந்த ரிசார்ஜ் தொகையினைக் குறைத்துள்ளது. இனி 20 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தாலே போதும். 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்க உள்ளது. இதற்கு முன்னர் 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தால், 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் இது குறித்த எவ்வித சலுகையையோ, அல்லது அறிவிப்பையோ வெளியிட வில்லை. எனவே, ஏர்டெல் நிறுவனத்தில் 35 ரூபாய் ரிசார்ஜ் திட்டமே தொடர்கிறது.