கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக, கடுமையான மழை பெய்து வருவதால் ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் பலப் பகுதிகளில் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. அங்கு இன்னும் சில தினங்களுக்கு மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், தட்ச்சின கன்னடா, உடுப்பி, உத்தரகண்டா, ஆகிய மாவட்டங்களுக்கு 72 மணி நேரத்திற்கும், குடகு, ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 48 மணி நேரத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், அம்மாநிலத்தின் பெலகாவி, பீதர், தார்வார், கதக், கலபுரகி, ராய்ச்சூர், கொப்பல், சாம்ராஜ்நகர், விஜயாபுரா, யாதகிரி, மண்டியா, தாவணகெரே, மைசூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மாநில அரசு முழு எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.