ரெட் மீ நோட் 8 ப்ரோ வெளியானது!

29 August 2019 தொழில்நுட்பம்
redminote8pro.jpg

இன்று ஜியோமி ரெட் மீ நோட் 8 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக வந்துள்ள, இந்த ஸ்மார்ட்போன் 14,000 ரூபாய் தொடங்கி 18000 ரூபாய் வரை இருக்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த போன் தான், உலகின் அதிகாரப்பூர்வ 64 மெகா பிக்சல் கொண்ட போன் ஆகும்.

6.53 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளேயுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன், மீடியடெக் ஹீலியோ ஜி90டி எனும் பிராசருடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிராஸசர் பிரம்மாண்டமான கேம்களை எவ்விதக் கஷ்டமும் இன்றி விளையாடுவதற்காகவும், மிக அதிக செயல்திறன் உள்ள ஆஃப்களை மிக எளிதாக கையாளுவதற்காகவும், உருவாக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு பின் பக்க கேமிராக்களுடன் வெளி வந்துள்ள இந்த போனில், பிரதான கேமிரா 64 மெகா பிக்சல் செயல்திறன் கொண்டது. மற்றொரு கேமிரா, 8 மெகா பிக்சலுடன் 120 டிகிரி வொய்ட் ஆங்கில் சென்ரை கொண்டுள்ளது. மற்றுமொரு கேமிரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சாருடனும், மற்றொன்று 2 மெகா பிக்சல் கேமிரா மேக்ரோ கேமிராவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் உள்ள செல்பி கேமிரா, 20 மெகா பிக்சல் ஏஐ (ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ்) தொழில்நுட்பத்தை கொண்ட அதிநவீன கேமிரா ஆகும். இந்த ஸ்மார்ட் போன் 4,500 எம்ஏஹெச் பேட்டரியுடன், 18 வாட்ஸ் அதிவிரைவு சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. மேலும் அதிவிரைவாக சார்ஜ் செய்வதற்கு, குயிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் யூஎஸ்பி டைப் சி கேபிளினை, பயன்படுத்த முடியும். மேலும், பிங்கர் பிரிண்ட் சென்சார் உட்பட பல அதிநவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கி உள்ளது இந்த ரெட் மீ நோட்8 மாடல்.

ஆன்ட்ராய்டு 10 பை எனும் அதிநவீன இயங்கு தளத்துடன், வெளிவர உள்ள இந்த ஸ்மார்ட்போன், பச்சை, க்ரை மற்றும் வெள்ளை நிறங்களில் வெளி வர உள்ளது. 6ஜிபி ரேம், 64 ஜிபி ரோம் உள்ள ரெட் மீ நோட் 8 போன் 14,000 ரூபாய்க்கும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரோம் உள்ள ரெட் மீ நோட் 8 போன் 16,000 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ரோம் உள்ள ரெட் மீ நோட் 8 போன் 18,000 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது.

HOT NEWS