புதிய அறிவிப்புகளை வெளியிட்டது தமிழக அரசு! யாருக்கு அனுமதி!

03 May 2020 அரசியல்
epscoronaa.jpg

தமிழகத்தில் வருகின்ற மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை தொடர்கின்றது. இருப்பினும், நோய் பாதிப்பு இல்லாத பகுதிகள் மற்றும் நோய் பாதிப்புக் குறைவாக உள்ளப் பகுதிகளில், பல விதிவிலக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு, இந்த விதிவிலக்குகள் பொருந்தாது. அங்கு, தற்பொழுதுள்ள தடைகள் அனைத்தும் நீடிக்கும்.

கட்டிடத் தொழில்கள், செங்கல் சூலைகள் செயல்பட அனுமதி. கட்டிடத் தொழில்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வாகனங்களை இயக்க அனுமதி.

உணவுக் கூடங்களில் பார்சல்கள் வழங்க அனுமதி. சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை, இந்த உணவுக் கூடங்கள் இயங்க அனுமதி.

திரையறங்குகள், டாஸ்மாக், மால்கள் உள்ளிட்டவைகளுக்கானத் தடைகள் தொடரும். தனிக்கடைகள் இயங்க அனுமதி. மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, ஆட்சியர் அனுமதி வழங்க உத்தரவு.

மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவைகளில், 33% ஊழியர்கள் பணிபுரிய அனுமதி.

சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் 10% ஊழியர்கள் பணிபுரியவும், மற்ற பொருளாதார சிறப்பு மண்டலங்களில் 50% ஊழியர்கள் பணிபுரியவும் அனுமதி.

மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலைகள் அனைத்தும், 50% ஊழியர்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 20 ஊழியர்களை பயன்படுத்த அனுமதி.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, மொபைல், கம்ப்யூட்டர் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் கடைகள் இயங்க அனுமதி. சமூக இடைவெளி அவசியம்.

கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக் கடைகள் அனைத்தும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் இயங்க அனுமதி.

சென்னையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகளுக்கு, காலை ஆறு மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி.

சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் அனைத்துக்கும் அனுமதி. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் சார்ந்த நிறுவனங்களில், 25% ஊழியர்களுக்கு அனுமதி.

வீட்டு வேலை செய்பவர்கள், சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் அனுமதி பெற்று பணிக்கு செல்லலாம்.

கிராமப்புறம் சார்ந்த தொழில்கள், சிறு குறு தொழில்கள் செயல்பட அனுமதி தேவையில்லை. கிராமங்களில் உள்ள தனிக் கடைகள் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அச்சகங்கள் செயல்பட அனுமதி.

சலூன் கடைகள், அழகு சாதன நிலையங்கள் செயல்படத் தடை. ரெயில்கள், விமானங்கள், பேருந்து சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைத் தொடரும்.

எலக்ட்ரானிக்ஸ் ஹார்ட்வேர் நிறுவனங்களும், உற்பத்தி செய்யும் நிலையங்களும் 50% வேலையாட்களுடன் செயல்பட அனுமதி.

HOT NEWS