எதற்கெல்லாம் தற்பொழுது தமிழகத்தில் விதிவிலக்கு! அரசு அறிவிப்பு!

24 April 2020 அரசியல்
edappadicovid19.jpg

தமிழகத்தில் எதற்கெல்லாம் தற்பொழுது அனுமதிக்கப்பட்டு உள்ளது என, தலைமைச் செயலாளர் கேசி சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்த்து, பிற பகுதிகளில், பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பாக நடக்கும், மாகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வரும் பணிகளுக்கு, அனுமதி அளிக்கப்படுகிறது.

அங்கு பணியாற்றுபவர்கள் அனைவருக்கும், முககவசம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். தேவைப்படும் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் பணியாளர்கள் இருக்கக் கூடாது. கண்டிப்பாக, சமூக இடைவெளி தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள், பின்பற்றப்பட வேண்டும்.

பாசன பணிகள், ஏரிகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ஊரகப்பகுதியில் உள்ள கட்டுமான திட்டப் பணிகள், அணைகள் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள், சாலை மற்றும் பாலங்கள் கட்டுமானம், குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகள், செங்கல் சூளை, ஹார்ட்வேர் பொருட்கள் சப்ளை (அழைத்தால் மட்டும்), மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகம் தொடர்பான பணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.

சுத்திகரிப்பு ஆலைகள், பெரிய உருக்கு ஆலைகள், பெரிய சிமெண்ட் ஆலைகள், பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான செயல்முறை இரசாயன தொழில்கள், உர ஆலைகள், சர்க்கரை ஆலைகள், கண்ணாடி ஆலைகள், டயர் ஆலை, காகித ஆலை, தொடர்ச்சியான பெரிய கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.

அத்தியாவசிய சேவைகளை அளிக்கும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகப் பணிகள் (33 சதவீத ஊழியர்களைக் கொண்டு) ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட கூடுதல் பணிகளை அனுமதிப்பதற்கு முன்பு, அனைத்து ஏற்பாடுகளும் சரியான முறையில் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என, அவருடைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ரீசார்ஜ் கடைகளும் அப்பகுதியில் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS