சம்பளத்தைக் கட் செய்யும் அம்பானி! ரிலையன்ஸ் செலவைக் குறைக்க நடவடிக்கை!

04 May 2020 அரசியல்
mukeshambani1121.jpg

இந்த மாதத்திற்கான சம்பளத்தில் கட் செய்துள்ளார் அம்பானி என, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, 40 நாட்களுக்கும் மேலாக, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொழில்துறை நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆட்டோமொபைல் துறையில், ஒரு வாகனம் கூட, புதிதாக வாங்கப்படவில்லை என, மாருதி சுசுக்கி நிறுவனம் கவலைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான, ரிலையன்ஸ் நிறுவனம் தற்பொழுது ஹைட்ரோகார்பன் பணியினை செய்ய இயலாமல் உள்ளது. மேலும், அந்த நிறுவனமானது, ஹட்ரோகார்பன், மீத்தேன் தயாரிப்பு, எரிபொருள் தொழிலில் ஈடுபட்டு உள்ளது. தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, இதனை தயாரிக்கும் பணியானது பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு, கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், 15 லட்சத்திற்கும் குறைவாக, வருட ஊதியம் பெரும் ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வித, பிடித்தமும் செய்யப்படவில்லை. ஆனால், 15 லட்சத்திற்கும் அதிகமான வருட ஊதியம் உள்ளவர்களின் சம்பளத்தில், 10% கட் செய்துள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், செலவுகளை குறைப்பதற்காகவும், நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், இத்தகையச் செயலை செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹத்தல் மேஸ்வானி தெரிவித்துள்ளார்.

2018-2019ம் ஆண்டுக்கான முகேஷ் அம்பானியின் சம்பளமானது, 15 கோடி ரூபாயாகும். தொடர்ந்து, 11 ஆண்டுகளாக எவ்வித மாற்றமுமின்றி, அவருடைய சம்பளமும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற 2021ம் ஆண்டுக்குள், தன்னுடைய நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காக, இன்று அந்நிறுவன மேல்மட்ட அதிகாரிகள், வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம், கலந்துரையாட உள்ளனர்.

HOT NEWS