கடனில்லாத நிறுவனமாகியது ரிலையன்ஸ்! அம்பானி மகிழ்ச்சி!

24 June 2020 அரசியல்
ambani.jpg

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்பொழுது கடனில்லாத நிறுவனமாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ஜியோ என்ற பெயரில் தொலைத்தொடர்பு சேவையினை அறிமுகம் செய்தது. அந்த நிறுவனம், மிகக் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை, இலவச பேசும் வசதி உள்ளிட்ட பலவித வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், மிகக் குறுகிய காலத்தில், இந்தியாவில் உள்ளப் பலரும் இதனைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக, ஜியோ நிறுவனம் மாறியது. இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இருந்து வந்த கடன் சுமையானது, அதன் மீது ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

அதன்படி, நாங்கள் எங்களுடைய பங்குதாரர்களுக்கு அளித்திருந்த உத்திரவாதத்தின் படி, 2021ம் ஆண்டு மார்ச்சுக்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன்கள் அடைக்கப்படும் என்றுக் கூறியிருந்தோம். ஆனால், அதற்கு முன்பாகவே இந்த மாதமே அனைத்துக் கடன்களும் அடைக்கப்பட்டு விட்டன என்பதை, பெருமையுடன் கூறிக் கொள்கின்றோம் என்று அறிவித்துள்ளார்.

கடந்த 5 வாரங்களுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின், பங்குகளை உலகின் முன்னணி நிறுவனங்கள் வாங்க ஆரம்பித்தன. ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை பேஸ்புக் நிறுவனமும், 2.32% பங்குகளை விஸ்டா ஈக்யூட்டி நிறுவனமும் மற்றும் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவனம் கைப்பற்றின. கேகேஆர், சில்வர் லேக், முபாதலா, ஜெனரல் அட்லான்டிக், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தன.

இந்த முதலீடுகளால், ஜியோவின் 24.7% பங்குகள் விற்கப்பட்டன. தற்பொழுது ஜியோவின் பங்குகளில் 75.3% பங்குகள் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கைகளில் உள்ளன. இந்த ஐந்து வாரங்களுக்குள் 1,15,694 கோடி ரூபாயினை ரிலையன்ஸ் நிறுவனம் திரட்டியது. இதனைப் பயன்படுத்தி தற்பொழுது ரிலையன்ஸ் நிறுவனத்தின், அனைத்துக் கடன்களும் அடைக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS