விரைவில் ப்யூச்சர் க்ரூப் பங்களை தாமதமின்றி வாங்க ரிலையன்ஸ் முயற்சி!

26 October 2020 தொழில்நுட்பம்
jiogigafiber.jpg

விரைவில், ப்யூச்சர் க்ரூப் பங்குகளை வாங்க, தாமதம் காட்டாக் கூடாது எனவும், அதன் பங்குகளை கைப்பற்றும் முயற்சியில் ரிலையன்ஸ் தீவிரம் காட்டி வருவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் நிறுவத்தின் ஜியோ நிறுவனமானது, தற்பொழுது தன்னுடைய நிறுவனத்திற்குப் பலவித முதலீடுகளை பெற்று வருகின்றது. பேஸ்புக் முதல், பல நிறுவனங்கள் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து வருகின்றன. இதனால், முகேஷ் அம்பானியின் மதிப்பானது, பல மடங்கு உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர் வரிசையில், ஆறாவது இடத்தில் தற்பொழுது முகேஷ் அம்பானி இருக்கின்றார். இந்த சூழ்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், புதிதாக ரிலையன்ஸ் ரீட்டெய்ல் என்றப் பெயரில் புதிய நிறுவனத்தினை உருவாக்கி உள்ளது.

அதற்கான முதலீடுகளையும் அந்த நிறுவனம் பெற்று வருகின்றது. அந்த நிறுவனமானது, தற்பொழுது ப்யூச்சர் க்ரூப் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் வாங்கியதால், இந்தியாவின் அசைக்க முடியாத நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதனிடையே, அமேசான் நிறுவனமும், ப்யூச்சர் க்ரூப் நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனம் தற்பொழுது முழு வீச்சில், ப்யூச்சர் க்ரூப் நிறுவனத்தின் பங்குகளை உடனடியாக கைப்பற்ற உள்ளது எனவும், இனியும் தாமதிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

HOT NEWS