ரெம்டெசிவர் மருந்தால் மிகப் பெரிய அளவில் பயனில்லை என, உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளது.
ஆனாலும், இந்த உலக சுகாதார மையத்தின் செயல்கள் அனைத்தும் ’டக்’ என இருக்கின்றன. அந்த அளவிற்கு தான் அந்த அமைப்பானது, கொரோனா விவகாரத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸானது, 80 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் பரவி உள்ளது. அங்கு கொரோனா வைரஸிற்கு தற்பொழுது ரெம்டெசிவர் எனும் மருந்தினைத் தான், நோயாளிகளுக்கு வழங்குகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், தற்பொழுது வரை அமெரிக்காவில் ரெம்டெசிவர் மருந்தேப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது குறித்து உலக சுகாதார மையம், புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இந்த ரெம்டெசிவர் மருந்தானது, பெரிய அளவில் தாக்கத்தினைக் குறைக்காது எனவும், இந்த மருந்தினைப் பயன்படுத்தியவர்களை சோதித்ததில் யாருக்கும் பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகவில்லை எனவும், இந்த மருந்தானது, கொரோனாவால் ஏற்படும் மரணத்தினை தடுக்க இயலாது எனவும் கூறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே, பல மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அவர் கொரோனா வைரஸிற்கு எதிராக, கோவாக்ஸின் மருந்தினைத் தான் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.