மர்ம உறுப்புகளில் ஏற்படும் கருமை நிறம் மறைய-வீட்டு வைத்தியம்

10 March 2019 உடல்நலம்
darksin.jpg

அனைத்து பெண்களுமே இந்தப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஒரு சிலர் இதிலிருந்து வெளிவர முயற்சித்தும் தோல்வியடைந்ததும் விட்டுவிடுகின்றனர். இந்தப் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் உண்டு. ஆனால், ஆண்கள் இதைக் கண்டு கொள்வதில்லை. அதே சமயம், தன்னுடைய மனைவிக்கு இது இல்லாமல் இருப்பதை அதிகம் விரும்புகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு சில எளிய வழி முறைகள் உள்ளன. அதைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சில் அதிகளவில் சிட்ரஸ் அமிலம் உள்ளது. இதன் சாறை எடுத்து கருமையாக உள்ள அந்தரங்கப் பகுதிகளில் தொடர்ந்து தேய்த்துக் காய விட வேண்டும். அவ்வாறு விடும் பொழுது, அது காய்ந்துவிடும். பின்னர் குளிக்கையில் சோப்புப் போட்டு கழவ அந்தக் கருமை நிறம் மறையும்.

கற்றாழை மற்றும் வெள்ளரிப் பசை

கற்றாழையை நன்கு அரைத்தப் பசையாக்கி அதில் சில துளிகள் நீரைக் கலந்து வைக்க வேண்டும். வெள்ளரிக்காயை நன்கு பசைப் போல அரைத்து அதில் சிறிதளவு நீரைச் சேர்க்க வேண்டும். பின்னர் இரண்டையும் கலந்து நன்றாகக் கலக்கியப் பின், உடலின் கருமையாக உள்ள அக்குல், கால்களின் இடுக்கு மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் தேய்ப்பதன் மூலம் கருமை நிறத்தை எளிதாகப் போக்க முடியும். மேலும், அந்தரங்கப் பகுதிகள் வீசுகின்ற துர்நாற்றத்தையும் போக்கி மென்மையான தேகத்தைப் பெற முடியும்.

பப்பாளி

பப்பாளி உடலின் நிறத்தை காக்கக் கூடிய ஒரு இயற்கை உணவாகும். இதனை நன்கு அறைத்து அதிலிருந்து கிடைக்கும் பசையை எடுத்து உடலில் உள்ள கருமை நிறந்தப் பகுதிகளில் தடவுவதன் மூலம் உடலில் உள்ள கருமை நிறம் விரைவாக மறையும். அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்களைப் போல மென்மையான உடலைப் பெற முடியும்.

தக்காளி

தக்காளியில் உள்ள அதிகப்படியான வைட்டமினால் தோளில் உள்ள செல்கள் அதிக நாட்கள் உயிருடன் இருக்கும். தக்காளியில் செய்தப்பசையை எடுத்து உடலில் கருமையாக உள்ளப் பகுதிகளில் அல்லது தேய்த்து வந்தால் உடலில் உள்ள கருமை நிறம் மறைந்து பொலிவு பெறும்.

இதனை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பின்பற்றி வந்தால் உடலின் மர்மப் பகுதிகளில் உள்ள கருமை நிறம் மறையும் அதே சமயம் அந்தரங்கப் பகுதிகளில் உள்ள துர்நாற்றம் முற்றிலும் மறைந்து நல்லபடியாக இருக்கும்.

HOT NEWS