உடலில் இயற்கையாகவே பருக்கள் உருவாகின்றன. இதற்குத் தோலில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் திசு மாற்றமே காரணம் ஆகும். இதனைப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. இது பெரும்பாலும் கழுத்து, நெஞ்சு போன்றப் பகுதிகளிலேயே ஏற்படுகிறது. இவை சில சமயங்களில் ஒரு சிலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதற்காகப் பலரும் தேவையின்றி பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்கின்றனர். இதற்கு சில எளிய வழிகள் உள்ளன. அதை நாம் பின்பற்றினாலே எளிதாக இப்பிரச்சனைக்குத் தீர்வுக் காணலாம்.
செய்யக்கூடாதவைஒரு சிலர் தன்னுடைய நகத்தால் உடலில் தோன்றுகின்றப் பருக்களைக் கிள்ளிப் பிய்த்துவிடுவர். இதன் விளைவாக அந்தப் பரு தற்காலிமாக மறைந்தாலும் அந்தப் பரு புண்ணாக மாறிவிடும். எனவே, அந்தத் தவறைத் தெரியாமல் கூடச் செய்ய வேண்டாம். அதே சமயம், நூலால் சுற்றி அந்தப் பருவை இழுத்துப் பிய்த்து விடுவர். இதனால், அந்தப் பருவிலிருந்து வரும் நீரால் உடலின் பிற பகுதிகளிலும் பருக்கள் பரவி விடும். எனவே, அந்தத் தவறையும் செய்ய வேண்டாம்.
சிறிதளவு ஆப்பிள் ஷீடர் வினிகரை எடுத்துக் கொள்ளவும். அதனை முதலில் சிறிய பஞ்சில் நனைத்துக் கொள்ளவும். அதனை பரு உள்ள இடத்தில் மெதுவாகத் தேய்க்கவும். ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் சில துளிகள் நீரைச் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதனை பரு உள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து வந்தால் எவ்வித வலியும் இன்றி பரு தானாக உதிர்ந்துவிடும். இது அதிகபட்சம் ஐந்து நாட்கள் செய்தாலே எவ்விதத் தடையமுமின்றி எளிதாக நாம், நம் உடலில் உள்ள பருக்களை வலியில்லாமல் நீக்கலாம். அதே சமயம், மருத்துவச் செலவும் மிச்சம்.