இன்று காலை பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, ஓப்போ நிறுவனத்தின் ரெனோ2 மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டது. 36,990 ரூபாய் மதிப்புள்ள இந்த ரெனோ2 ஸ்மார்ட் போன் ஆன்ட்ராய்டு 9 எனும் இயங்கு தளத்துடன் வெளிவர உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில், அதிவிரைவு ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது. இதனால், இந்த ஸ்மார்ட் போன்னின் செயல் மிகவேகமாக இருக்கும். இதில், பெரிய ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை எவ்வித சிரமமுமின்றி, பயன்படுத்த முடியும். 6.55 இன்ச் ஆமோஎல்ஈடி திரையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், கோரில்லா கிளாஸ் 6 என்ற கடினத் தன்மையுடைய கண்ணாடியால் கூடிய தொடுதிரையை உடையது. இதனால், இந்த போனின் டிஸ்பிளே மிகப் பாதுகாப்பாக இருக்கும். அதே சமயம், கொரில்லா கிளாஸ் 5 இந்த போனின் பின் பகுதியில், போனின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 730ஜி என்ற பிராசசருடன், 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரோம் மெமரியை கொண்டுள்ளது. இது இன்பில்ட் ஸ்டோரேச் ஆகும். எக்ஸ்டெர்னல் மெமரி கிடையாது.
இந்த போனின் பின் பகுதியில் 4 கேமிராக்கள் உள்ளன. ஒன்று 48 மெகா பிக்சலுடன் ஐஎம்எக்ஸ் 586 சென்சாருடன் ஈஐஎஸ் மற்றும் ஓஐஎஸ் தொழில்நுட்பத்தினையும், இரண்டாவது கேமிரா 13 மெகா பிக்சலுடன் டெலிபோட்டோ லென்சுடனும், மூன்றாவது கேமிரா 8 மெகா பிக்சலுடன் வொய்ட் ஆங்கிள் லென்சுடனும், கடைசி கேமிரா 2 மெகா பிக்சலுடன் மோனா லென்சுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த போனில் போட்டோ எடுத்தால், எவ்வளவுத் துல்லியமாக புகைப்படம் வரும் என்பதை, நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
இந்த ஸ்மார்ட் போன் 4000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது. இதுவும் இன்பில்ட் பேட்டரி ஆகும். இந்த பேட்டரியானது. விஓஓசி 3.1 பிளாஸ் சார்ஜ் அம்ச்சத்தை உடையது. இதனால், இந்த ஸ்மார்ட் போனை எளிதாகவும், விரைவாகவும் சார்ஜ் செய்ய இயலும். இந்த ஸ்மார்ட் போனின் டிஸ்பிளேயில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஸ்மார்ட் போனை மிக வேகமாக ஓப்பன் செய்ய இயலும்.
இவ்வளவு அதிக வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ரெனோ 2எப் மற்றும் ரெனோ 2 இஷெட் என்ற மாடல்களாக சந்தைக்கு வர உள்ளது.