170 கோடிக்கு மது விற்பனை! குடிமகன்கள் அபார சாதனை!

08 May 2020 அரசியல்
tasmacopening.jpg

நேற்று ஒரே நாளில், தமிழகத்தில் 170 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்றத் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று காலை பத்து மணி முதல், டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், காலையிலேயே மதுபானப் பிரியர்கள் வரிசையில் வந்து நின்றனர். இவர்கள் சமூக இடைவெளியினைக் கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில், மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மதுபானப் பிரியர்கள் அமைதியாக வரிசையில் நின்று, மதுபானப் பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும், பல இடங்களில் பட்டாசு வெடித்தல், தேங்காய் உடைத்தல், சூடம் காட்டுதல் உள்ளிட்டவைகளைச் செய்தனர்.

காலையில் ஆரம்பித்து மாலை ஐந்து மணி வரையிலும், மதுபானங்களை வாங்கிக் குவித்தனர். இதனால், பெருமளவிலான டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. மொத்தமாக, நேற்று மட்டும் 170 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு இருக்கலாம் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

HOT NEWS