சுஷாந்திற்குப் போதைப் பழக்கம்! ரியாவிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

09 September 2020 அரசியல்
rheachakraborty.jpg

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகக் கூறிய, அவருடைய முன்னாள் காதலி ரியா சக்கரபோர்த்திக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் 14ம் தேதி அன்று, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தன்னுடைய குடியிருப்பில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், நாட்டினையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக, தற்பொழுது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரித்து வருகின்றது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய முன்னாள் காதலியும், அவருடைய குடும்பமும் சுஷாந்தின் வங்கிக் கணக்கினை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ரியாவினை சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில், சுஷாந்த்திற்கு போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக, கூறியிருந்தார். இது இந்திய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக நேற்று அழைத்துச் சென்றனர்.

அவர்கள் விசாரணையில் பலத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ரியாவிற்கு போதைப் பொருட்களை வாங்கி, விற்கும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற விசாரணையில், சுஷாந்திற்கு பழக்கம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால், ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் உள்ளிட்டோரைப் போலீசார் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மாலை 7.30 மணியளவில் நடிகையும், சுஷாந்தின் முன்னாள் காதலியுமான ரியா சக்ரபோர்த்தியினை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து உள்ளனர். அவருடைய ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அவரை ஆன்லைன் மூலம், நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலினை விதித்துள்ளார்.

HOT NEWS