சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோத்திக்கு தற்பொழுது ஜாமீன் அளித்துள்ளது நீதிமன்றம்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவருடைய முன்னாள் காதலி ரியா சக்ரபோத்தியும், அவருடைய சகோதரர் சோவிக்கும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், போதைப் பொருட்களை விற்கும் குழுவிற்கும் தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 8ம் தேதி அன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த சூழ்நிலையில், அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து இருந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், ரியாவிற்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ஆனால், அவருடைய சகோதரர் சோவிக்கிற்கு ஜாமீன் வழங்கவில்லை.