முகம் ஒரு வாரத்தில் பொலிவு பெற அரிசி நீர்

10 March 2019 உடல்நலம்
rice-facialtips.jpg.jpg

உலகில் உள்ள அனைவருக்கும் உள்ள ஆசைகளில் ஒன்று, முகவும் பொலிவாகவும், சிவப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே. ஆனால், வெளியில் இல்லை என்றுக் கூறிக் கொண்டாலும் மனதில் அந்த ஆசை உண்டு. குறிப்பாக, அனைத்துப் பெண்களுக்கும் இந்த ஆசை உண்டு. பல விதமான வழிமுறைகள் இருந்தாலும் என்றுமே இயற்கையான வழிமுறைகளேச் சிறந்தது. இங்கு முகம் மற்றும் உடல் பொலிவு பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

அரிசி

தென்னிந்தியர்களின் பிரதான உணவே, அரிசி தான். இதுவே மூன்று வேலை உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை குக்கரில் வேகவைத்து சாப்பிட்டால் உடல் எடைக் கூடும். எனவே, இதனை சாதாரண பானையில் வேக வைத்து உண்பது நன்மை விளைவிக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். அரிசியைக் கழுவியப் பின்னரே உலையில் இடுவர். அதற்கு முன் கழுவிய அரிசியில் சிறிதளவு நீரைச் சேர்த்து பின்னர் சுமார் ஒரு மணி நேரம் ஊர வைக்க வேண்டும். அந்த நீரை எடுத்து ஒரு பாட்டிலில் அடைத்து வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் நான்கு நாட்கள் வைத்திருக்க வேண்டும். அந்த அரிசியை உணவுக்குப் பயன்படுத்தலாம்.

நான்கு நாட்களுக்குப் பின் அந்த அரிசி நீரை எடுத்து சிறியப் பஞ்சில் நனைத்து முகத்தில் அழுத்தமாக அதே சமயம் மெதுவாகத் தடவ வேண்டும். பின்னர் ஒரு கால் மணி நேரம் காய விட்டு மறுபடியும் ஒரு முறை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் நம்முகத்தின் நிறம் மிகவும் பொலிவாகவும் சுருக்கங்கள் இன்றியும் மாறும். இதற்குப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள் இதனைச் செய்து வந்தால் ப்யூட்டிப் பார்லர் செல்லத் தேவையில்லை.

அரிசி மாவு

அதே போல அரிசி மாவையும் முகத்தில் தடவி சுமார் இருபது நிமிடங்கள் காய வைத்தப்பின், குளிர்ந்த நீரில் குளித்தால் முகம் பொலிவு பெறும். இதனை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் இயற்கையான மற்றும் நிரந்தரமான சிவந்த நிறத்தை நாம் பெறலாம்.

வடிகஞ்சி

அதேப் போல அரிசியை வேக வைத்து, வடித்த பின் கிடைக்கும் வடிகஞ்சியை குளிர வைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ளப் பருக்கள் விரைவாக மாறும். அதேப் போல, முகத்தில் உள்ள வடுக்கள், கருநிறப் புள்ளிகள் அனைத்தும் மறையும். இதற்கு நாம் தனியாக எதையும் தயார் செய்யத் தேவையில்லை. மேலும், நாம் கீழே ஊற்றும் பொருளைப் பயன்படுத்தினால் அது நமக்கு லாபம் தானே.

HOT NEWS