விவசாயிகள் போராட்டம்! ரிஹனா, மியா கலிபா, கிரேட்டா துன்பர்க் ஆதரவு!

03 February 2021 அரசியல்
rihannagretmia.jpg

டெல்லியில் 70 நாட்களாக போராடி வருகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக, பாப் பாடகி ரிஹானா, ஆபாச நடிகை மியா கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வளர் கிரேட்டா துன்பர்க் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசானது மூன்று புதிய வேளாண் திருச்ச மசோத்தாக்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்டப் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய வாகனங்களில் டெல்லிக்கு படையெடுத்தனர். டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள அவர்கள், போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனவரி 26ம் தேதி அன்று, குடியரசுத் தின விழா நாளில் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவிக்கும் விதமாக 3.5 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்ற மிகப் பிரம்மாண்டமான பேரணியினையும் நடத்தினர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு, வாக்குவாதங்கள் முதலியவை ஏற்பட்டன. இந்த சூழலில், உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நாம் ஏன், இந்த விவசாயிகளின் போராட்டம் பற்றிப் பேசக் கூடாது என, ஆதரவுப் பதிவினை வெளியிட்டு உள்ளார்.

அதே போல், சுற்றுசூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க்கும் நாம் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார். இந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, இளைஞர்களின் மனதினைக் கொள்ளைக் கொண்ட ஆபாசப் பட நடிகை, மியா கலிபாவும் தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்து உள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

HOT NEWS