பிரபல சினிமா நட்சத்திரம் பாஜகவில் இணைந்தார்!

06 October 2019 அரசியல்
rksuresh.jpg

மருது, பில்லா பாண்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்தவரும், ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருமான, ஆர்கே. சுரேஷ் பாஜகவில் இணைந்தார்.

நேற்று முன்தினம், தமிழக பாஜக தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்கே சுரேஷ். அதனைப் புகைப்படமாக எடுத்தும் வெளியிட்டார்.

இந்நிலையில், திடீரென்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், இனி தமிழகத்தில் #GoBackModi வேலை செய்யாது எனக் கூறினார்.

HOT NEWS