உலகமே தற்பொழுது பம்பரமாக சுழன்று வருகிறது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை, அனைவருமே ஏதாவது ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். அல்லது அதனைப் பற்றி யோசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். தற்பொழுது ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வின் முடிவு வெளிவந்துள்ளது.
உலகளவில் பிரம்பலமான பல்கலைக்கழகமான ஆக்ஸ்போஃர்ட் பல்கலைக்கழகம், ஒரு ஆய்வினை மேற்கொண்டது. அதன்படி, 2030ம் ஆண்டு உலகம் முழுக்க ரோபோக்கள் பணி புரிய ஆரம்பிக்கும் என கணித்துள்ளது. மேலும், பல துறைகளில் ஆட்டோமேஷன் எனும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்முறைக்கு வந்துவிடும் என கணித்துள்ளது. மேலும், மனிதர்களின் உழைப்பினை விடவும், மிகக் குறைவான குறைகளே ரோபோக்களின் உழைப்பில் இருக்கும் என்பதாலும், செலவுகள் குறைவு என்பதாலும், பெரிய நிறுவனங்கள் அனைத்தும் அதையேப் பயன்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.
ஏற்கனவே, இந்தியாவில் உள்ள பெரிய ஐடி நிறுவனங்களில், ஆட்டோமேஷன் எனும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில், 2030ம் ஆண்டு, அதுவும் ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் எனப்படும், ஏஐ தொழில்நுட்பத்திற்கு முழுமையாக மாற்றப்பட்டுவிடும் எனவும் கருதுகின்றனர்.
ஒருவேளை அவ்வாறு நடந்தால், கண்டிப்பாக, உலகளவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் எனவும் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.