ரோபோக்கள் மூலம் மருத்துவ சேவை! அசத்தும் திருச்சி! குவியும் பாராட்டுக்கள்!

30 March 2020 அரசியல்
coronarobot.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஏப்ரல் 14ம் தேதி வரை, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டும் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகின்றது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தினமும், இது குறித்து ஆய்வுகள் செய்தும், செய்தியாளர்களை சந்தித்தும், புதிய திட்டங்களை அறிவித்தும் வருகின்றார்.

அதன்படி, திருச்சியில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, சிகிச்சை அளிக்க ரோபோக்களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில், அங்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது. திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான புரபல்லர் டிஜிட்டல்ஸ் நிறுவனம், தான் தயாரித்துள்ள ரோபோக்களை இலவசமாக வழங்க முன் வந்துள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள அந்த நிறுவனத்தின் உயரதிகாரி, இந்த ரோபோக்களுக்கு ஜாபி எனப் பெயர் வைத்துள்ளோம். இது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல உதவிகரமாக இருக்கும். மேலும் ஜோபி மெடிக் என்ற ரோபோவினையும் உருவாக்கி உள்ளோம்.

இது, ரிமோட் கன்ட்ரோல் மூலமும், செல்போன் மூலம் இயங்கக் கூடியது. இந்த ரோபோட்களை ஒரு கிலோ மீட்டர் வரை இயக்க இயலும். அரசாங்கம் பயன்படுத்த முன் வந்தால், இதனை இலவசமாகத் தயார் என்றுக் கூறியது. இந்த ரோபோக்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குப் பதிலாக பயன்படுத்தலாம் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாதிரி ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS