தனுஷ் ஒரு பாடல் பாடி, அதனை இணையத்தில் வெளியிட்டு விட்டால் போதும். அவ்வளவு தான்! அது வைரலாகி, ஹிட்டாகி, சாதனைகளை உருவாக்க ஆரம்பித்து விடுகின்றது.
மூணு திரைப்படத்தில் பாடிய, ஒய் திஸ் கொலவெறிடி பாடல் தான் தனுஷின் இந்த வெற்றிப் பாதையை ஆரம்பித்து வைத்தது. அப்பொழுது முதல் இப்பொழுது வரை, அவர் தான் இணைய தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார்.
இந்த வருடம் வெளியான சிறந்த பத்துப் பாடல்களின் வரிசையில், உலகளவில் மாரி படத்தில் இடம்பெற்றுள்ள #ரவுடிபேபி பாடல் ஏழாம் இடத்தினைப் பிடித்துள்ளது. இதனை, அதிகாரப்பூர்வமாக பில்போர்ட் அறிவித்துள்ளது.
சரி, இது தான் இப்படி என்றால், இந்தியாவில் அதிகளவில் பார்க்கப்பட்ட பாடல்கள் வரிசையில், #ரவுடிபேபி தான் நம்பர் ஒன் என யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்பொழுது வரை அந்தப் பாடல் 71 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 28 லட்சம் லைக்குகளையும் பெற்று அசத்தியுள்ளது. இதனை தற்பொழுது, தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.