டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யாவினைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அம்மணி பிரபலம். டிக்டாக்கினைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில், இவர் ஒரு லேடி சூப்பர்ஸ்டார் என்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அந்த அளவிற்கு, டிக்டாக்கே கதியாக வாழ்பவர். அவருடைய, டிக்டாக் கணக்கினை தற்பொழுது டிக்டாக் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதனால், சூர்யா அதிர்ச்சியில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தொடர்ந்து பலரும் எனக்கு டிக்டாக்கில் பாலியல் தொல்லைக் கொடுப்பதாக புகார் தெரிவித்தார். இதனையடுத்து, இவருடையப் புகாரினை விசாரித்த போலீசார், மதுரையைச் சேர்ந்த மதிவண்ணன் என்பவர் தான் தொல்லைக் கொடுப்பதை கண்டுபிடித்தனர். அவரை அழைத்து எச்சரிக்கவும் செய்தனர்.
இதனிடையே, இந்த வீடியோக்களை டிக்டாக் நிறுவனம் கவனித்துக் கொண்டிருந்தது. பாலியல் தொல்லை எனப் புகார் வந்ததைத் தொடர்ந்து, அவருடைய அனைத்து வீடியோக்களையும் டிக்டாக் நிறுவனம், நிறுவனத்தின் பாதுகாப்பு கருதி நீக்கியுள்ளது. மேலும், ரவுடி பேபி கணக்கினையும் முடக்கியது டிக்டாக்.
இதனை சூர்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை போல, உடனே வேறொரு வீடியோவில் தன்னுடைய குமுறல்களைக் கொட்டித் தீர்த்துள்ளார். இவருக்கு ஆதரவு தெரிவித்து, ஜிபி முத்து என்னும் மற்றொரு டிக்டாக் பிரபலம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
தன்னுடைய கணவனை விட்டு, டிக்டாக்கில் வீடியோ போடுவதற்காக, தனியாக வாழ்ந்து வருகின்றார் ரவுடி பேபி சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.