ரவுடி சங்கர் எண்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கானது, தற்பொழுது சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.
சென்னை அயனாவரத்தில் பிரபல ரவு சங்கரைப் போலீசார் எண்கவுண்டர் செய்ததில், அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவருடைய உடலானது பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவருடைய உடலை, அவருடைய குடும்பத்தினர் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எண்கவுண்டர் போலி எண்கவுண்டர் எனவும், இதனை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அதுவரை, சங்கரின் உடலை வாங்கப் போவதில்லை எனவும் கூறினர். இதனைத் தொடர்ந்து, இந்த எண்கவுண்டர் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தின் விதிகளின் படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரே இந்த வழக்கினை விசாரிக்கக் கூடாது என்றக் காரணத்தால், இந்த வழக்கினை தற்பொழுது சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றியுள்ளது. இந்த வழக்குக் குறித்து, நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிபிசிஐடிப் பிரிவிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சங்கரின் உடலினை அவருடைய உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.