டிக்டாக் பிரபலங்களான ஜிபி முத்துவினைப் பற்றியும், ரவுடி பேபியைப் பற்றியும் தெரியாதவர்கள் இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு, இருவரும் ஜோடி போட்டுக் கொண்டு டிக் டாக்கினைத் தெறிக்கவிட்டு வந்தனர்.
இந்நிலையில், அவர்களை யூடியூப்பில் சேனல் வைத்திருப்பவர்கள் ஒரு குறும்படம் எடுப்பதாக கூறியிருந்திருக்கின்றனர். அவர்கள் கூறியதால், இவர்களும் இணைந்து நடித்து இருக்கின்றனர். ஆனால், அவர்கள் குறும்படம் எடுக்கவில்லை.
மாறாக, அதனை வைத்து ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். போதாத குறைக்கு, கலாட்டா சேனல் சார்பில், அவர்களிடம் பேட்டியும் கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களை, கலாட்டா சேனலைச் சேர்ந்தவர்களே மீமீ போட்டு அவமானப்படுத்தி உள்ளனர்.
அந்தப் பேட்டியில் பேசிய ரவுடி பேபி சூர்யா, நான் டிக்டாக் வந்து ஐந்தாறு மாதம் தான் ஆகின்றது. அதற்குள் பல லட்சம் பஃலோவர்கள் வந்துவிட்டனர். என்னை எவ்வளவோ அசிங்கப்படுத்தி உள்ளனர். அதனைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை என்றார். தற்பொழுது, பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வருகின்றோம் என்றார்.
மதயானைக் கூட்டம் படத்தினை இயக்கிய இயக்குநர், என்னுடைய ரசிகராக இருந்துள்ளார். அது எனக்குத் தெரியாது. அவர் என்னிடம், உங்களுடைய ரசிகன் நான் என்று கூறியிருக்கின்றார். பின்னர், என்னுடையப் படத்தில் நீங்கள் நடியுங்கள் எனவும் கூறியிருக்கின்றார் என சூர்யா கூறியுள்ளார்.
இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும் எனவும், அதில் ஜிபி முத்துவிற்கும் வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் ரவுடி பேபி சூர்யா தெரிவித்துள்ளார்.