உற்ற தோழனாக இருப்பவர் தளபதி ஸ்டாலின்! ஆர்எஸ் பாரதி! திருமா கண்டனம்!

24 May 2020 அரசியல்
rsbharathi.jpg

நேற்று பட்டியலின மக்களை பற்றி அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட ஆர்எஸ் பாரதி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது குறித்து, அவர் தற்பொழுது கருத்துத் தெரிவித்துள்ளார்.

என் மீது உள்நோக்கம் கொண்டு சித்தரிக்கப்பட்ட வழக்கில் அரசியல் காரணங்களுக்காக என்னை கைது செய்யும் முயற்சியை முறியடிக்க உதவிய தி.மு.க வழக்கறிஞர் அணிக்கும், இந்த கடினமான சூழலில் எனக்கு பக்க பலமாகவும் உற்ற தோழனாகவும் விளங்கிய திமுக தலைவர் தளபதி முகஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் டிஆர் பாலு அவர்களுக்கும், மகளிரணி செயலாளர் திருமதி கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், தெய்வசிகாமணி, செல்வம், மா சுப்ரமணியன், ஜெ அன்பழகன் மற்றப் பலருக்கும் ஆதரவு அளித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ் பாரதி கைது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள திருமாவளவன், தலித் மக்களுக்கான மாநில ஆணையம் statecommission இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க முதல்வர் CMTN முன்வருவாரா? கூட்டணி கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா?

ஆண்டுக்கு 2முறை முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய 'விழிகண்' கூட்டம் 3ஆண்டுகளாக நடைபெறவில்லையே; கூட்டணிகட்சியான பாஜக ஏனென்று விளக்கம் கேட்குமா? உடனடியாக நடத்தச்சொல்லி முதல்வரை வலியுறுத்துமா?

தலித்துகளுக்கான துணைத்திட்டத்தை Sub_plan நடைமுறைப்படுத்துவதற்கென தமிழகஅரசு சட்டம் legislation இயற்றவில்லையே; கூட்டணி கட்சியான பாஜக, ஏனென்று விளக்கம் கோருமா?அவ்வாறு சட்டம் இயற்றும்படி முதல்வரிடம் வலியுறுத்துமா?

தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசியகுற்ற ஆவணமையம் NationalCrimesRecord அறிவித்துள்ளது. சாதிவெறியர்களால் ஆணவக்கொலைகளும் honourkillings அதிகரித்துள்ளன. இதுகுறித்து கூட்டணிகட்சியான பாஜக, தமிழகமுதல்வரிடம் விளக்கம் கேட்குமா?

தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமா?அந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமா? தலித் தலைவர்களை நாற்காலியில் அமரவைக்குமா?

பெண்கள்,சிறுமிகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகார் செய்ய tollfreenumber உள்ளதே; அதுபோல தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்செய்ய toll free number வழங்க, கூட்டணி கட்சியான பாஜக தமிழக அரசை வற்புறுத்துமா?

தமிழகத்தின் மூத்தஅமைச்சர் ஒருவர் அண்மையில் ஒரு பழங்குடி சிறுவனை tribal_boy அழைத்து, தனது செருப்பைக் கழற்றச் சொன்னாரே; அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டுமென கூட்டணி கட்சியான பாஜக, தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமா?

சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழி நடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?

தனது இறுதி மூச்சுவரை சாதியத்தை/இந்துத்துவத்தை/ சனாதனத்தை/மூர்க்கமாக எதிர்த்த முரட்டுப்போராளி புரட்சியாளர் அம்பேத்கர். எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தைவிட்டு பலஇலட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும்?ஆதரிப்பது ஏன்? பாஜக விளக்குமா?

சாதி ஒழிப்புக்காக 10இலட்சம் பேருடன் ஒரேநாளில் பௌத்தம் தழுவி இந்து மதத்தை ஆட்டம் காண வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரளவுக்கு, இந்து மதத்தின் மீது தாக்குதல் தொடுத்தவர் யார்? கடவுள் அவதாரங்களைத் தோலுரித்தவர் யார்? அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா?

HOT NEWS