படித்தவர்களின் குடும்பத்தில் தான் விவாகரத்து அதிகமாக உள்ளது! ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!

18 February 2020 அரசியல்
rss2.jpg

படித்தவர்களின் குடும்பத்தில் தான், அதிகளவில் விவாகரத்து ஏற்படுகின்றது என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அதிரடியாக பேசியுள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் ஒரு இந்து, அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளிக்கின்றேன். ஆனால், என்னுடைய மதத்தில் உறுதியாக இருக்கின்றேன். இந்தியாவிற்கு, இந்து மதத்தினைத் தவிர, வேறு வழியில்லை. இந்து பெண்கள், அறிவொளிகளாக இருக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர், தங்களுடைய குடும்பத்தாருடன் நம்முடைய இயக்கம் பற்றிப் பேச வேண்டும். குடும்பம் இல்லாமல், சமூகம் இல்லை. சமுதாயத்தின் பாதியாக உள்ள பெண்கள், அறிவாளிகளாக இருக்க வேண்டும். அதிகம் படித்தவர்களின் குடும்பத்தில் தான், அதிகளவில் விவாகரத்து ஏற்படுகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது படிப்பினால் ஏற்படும் ஆணவம். இதனால், குடும்பங்கள் வீழ்ச்சி அடைகின்றன.

பொதுமக்களும், தற்பொழுது அற்பத்தனமான விஷயங்களுக்காக போராட்டங்களை நடத்துகின்றனர். சமூகம் என்பது ஆண்களை மட்டும் குறிப்பதல்ல. இந்து சமூகத்தினைச் சேர்ந்தவர்கள், ஒரு குடும்பமாக நடந்து கொள்வதினைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS