தேர்தல் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத் உட்பட கோவில்களுக்குச் சென்றார். பின் கேதர்நாத்தில் உள்ள ருத்ரா என அழைக்கப்படும் குகையில், அமர்ந்து அமைதியாக ஒரு நாள் முழுக்கத் தியானம் செய்தார். தேர்தல் முடிவும் வந்தது. மீண்டும் பிரதமர் ஆகிவிட்டார்.
அவ்வளவு தான். வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன? கூட்டம் கூட்டமாக அந்த குகைக்குச் சென்று தியானம் செய்ய முயற்சி செய்கின்றனர் நம் மக்கள். அங்கு சென்று செல்ஃபி எடுப்பது உட்பட பல செயல்களை அங்கு செய்கின்றனர். இதனால், தற்பொழுது அந்தப் பகுதியே ரொம்ப பிசியாகி விட்டது.
ருத்ரா குகைக்கு முன்பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். அப்படி இருக்கும் இடத்திற்கு, பிரதமர் மோடி சென்று வந்த அந்த மாதமே நான்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுவிட்டன. ஜூன் மாதத்தில் 28 பேரும், ஜூலையில் 10 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 8 பேரும், செப்டம்பரில் 19 பேரும் மற்றும் அக்டோபருக்காக 10 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இருக்க, 999 ரூபாயும், இரவு நேரம் தங்கி இருக்க 1500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அங்கு தங்கும் ஆட்களுக்கு, கழிப்பறை வசதி, ஹீட்டர், மின்சாரம், குடிநீர் வசதி, காலையில் டீ மற்றும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவும் வழங்கப்படுகிறது. அங்கு தற்பொழுது 24 மணி நேரமும், அனைத்து நாட்களும் வேலை செய்வதற்கு ஆட்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு பிசியாகிவிட்டது அந்த ருத்ரா குகை.