லாக்டவுனைப் பின்பற்றாவிட்டால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

05 April 2020 அரசியல்
handcuffs19.jpg

இந்தியாவில் தற்பொழுது, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை பொதுமக்கள் வெளியில் தேவையின்ற நடமாடக் கூடாது எனவும் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பலால்லா கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, இந்த ஊரடங்கினை மதிக்காமால், வெளியில் தேவையின்றி சுற்றித் திரியும் நபர்களை பேரிடர் சட்டத்தினைப் பயன்படுத்தி கைது செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியத் தேசியப் பேரிடர் சட்டமானது உருவாக்கப்பட்டு இருந்தது. அதன்படி, யாராவது அரசாங்கத்தின் உத்தரவினை மீறினாலோ, அரசாங்க ஊழியர்களுக்கு இடையூறாக செயல்பட்டாலோ, ஐபிசி செக்சன் 51 டூ 60 பேரிடர் சட்டத்தின் படி, ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம்.

அதாவது ஒரு வருட தண்டனை அல்லது அபராதம் அல்லது சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தற்பொழுது வரை, தமிழகத்தில் மட்டும், 64,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS