ரஷ்யாவில் 2வது கட்ட சோதனையில் கொரோனா மருந்து! இன்று தொடங்கும் சோதனை!

27 July 2020 அரசியல்
vaccinecovid19.jpg

இன்று ரஷ்யாவில் கொரோனா மருந்தின் மீதான, 2வது கட்ட சோதனையானது தொடங்குகின்றது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு உள்ள, 2வது கொரோனா வைரஸ் தடுப்பூசியானது தற்பொழுது மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, தற்பொழுது வரை ஒன்றரைக் கோடிக்கும் அதிகமானோரிடம் கொரோனா வைரஸானது பரவி உள்ளது.

இந்த வைரஸால் ஏழு லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸானது, நாளுக்கு நாள் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பல நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், சரியான மருந்து கிடைக்காததால், இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்பொழுது 110க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், ரஷ்யாவின் முதல் தடுப்பூசியானது இறுதி கட்ட ஆய்வில் உள்ளது. அதே போல், சைபீரியன் வெக்டார் இன்ஸ்ட்டியூட் அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள, ரஷ்யாவின் 2வது தடுப்பூசியானது மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே முதல் கட்ட பரிசோதனையானது முடிவடைந்துள்ள நிலையில், தற்பொழுது 2வது கட்ட பரிசோதனையானது ஜூலை 27ம் தேதி அன்று தொடங்குகின்றது. இந்த சோதனையும் வெற்றிப் பெறும் பட்சத்தில், இறுதிக் கட்ட சோதனையானது செய்யப்படும். அதன் பின்னர், மனிதர்களுக்கு இந்த ஊசியானது வழங்கப்படும்.

HOT NEWS