சீனாவுடன் மோதத் தயாராகும் ரஷ்யா! உளவாளியால் புடின் கடும் கோபம்!

05 August 2020 அரசியல்
vladimirputin.jpg

சீனாவின் மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வந்த ரஷ்யாவும், தற்பொழுது சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து, உலகம் முழுக்க சீனாவின் ஊஹான் பகுதியில் உருவாகிய வைரஸானது பரவி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக, உலக நாடுகள் தற்பொழுது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, உலகின் வல்லரசு நாடுகளாக விளங்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், ரஷ்யாவும் அமெரிக்காவும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது சீனாவில் ரஷ்ய அரசு கடும் கோபத்தில் உள்ளது. சீனாவும் ரஷ்யாவும் கம்யூனிச நாடுகள். இரண்டும் பல நூற்றாண்டுகளாக நல்ல நட்புறவுடன் இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், சீனாவிற்கு ரஷ்ய அரசு எஸ்-400 ஏவுகணைகளை வழங்க இருந்தது.

இந்நிலையில், சீனா அரசு ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டோக் என்றப் பகுதியானது எங்களுக்குச் சொந்தமானது என்று, உரிமைக் கொண்டாடி வருகின்றது. இதனால், ரஷ்யா கடும் கோபம் அடைந்து உள்ளது. 1600ம் நூற்றாண்டு காலக் கட்டத்தில், இந்தப் பகுதியானது சீனாவின் ஆட்சிக்குள் இருந்தது எனவும், 2ம் ஓபியம் போரில் தோற்றதால், இந்த இடம் பறிபோனது எனவும் கூறி வருகின்றது.

இந்த சூழ்நிலையில், சீனாவின் இந்த திடீர் செயலால் ரஷ்யா அரசு கடும் விரக்தியினை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, சீனாவிற்கு வழங்க இருந்த எஸ்-400 ஏவுகணைகளை வழங்கப் போவதில்லை என்றுக் கூறியது. மேலும், தற்பொழுது அமெரிக்காவும், ரஷ்யாவும் மிக நெருக்கமாக உள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன அரசு, ரஷ்யா வேறு யாருடைய பேச்சையோக் கேட்டு இவ்வாறு நடக்கின்றது என்றுக் குற்றம் சாட்டியது.

இந்த பதற்றங்களுக்கு மத்தியில், சீனாவின் சேட்டையினை ரஷ்ய அரசு கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில், சீன உளவாளி ஒருவரை ரஷ்ய இராணுவத்தினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவரை விசாரிக்கையில், ரஷ்ய அரசின் செயல்களை சீனாவிற்கு அனுப்பியதாக கண்டுபிடித்துள்ளனர்.

இது ரஷ்யாவினை ஆளும் அதிபர் புடினைக் கடும் கோபத்தில் மூழ்க வைத்துள்ளது. அவர் ஏற்கனவே உளவாளியாக இருந்த பின்னரே, ரஷ்யாவின் அதிபராக மாறியவர். அவரிடமே, இப்படி நடந்து கொண்டால் சும்மா இருப்பாரா? இது குறித்து விளக்கம் கேட்டது ரஷ்ய அரசு. அதற்குப் பதிலளித்துள்ள சீனா, தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகவே உளவாளியினை அனுப்பியதாகவும், மற்றபடி எவ்விதக் காரணத்திற்காகவும் இல்லை எனவும் கூறியுள்ளது.

இந்த விஷயம், தற்பொழுது பெரிய அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. நட்பு நாடாக உள்ள ரஷ்யாவிற்குள்ளேயே, தன்னுடைய உளவாளியினை சீன அனுப்பியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நட்பில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில், சீனாவிற்கு எதிராக ரஷ்யா செயல்பட ஆரம்பிக்கும் என, பலர் கருதுகின்றனர்.

HOT NEWS