ரஷ்யாவில் ஊசி ரெடி! அக்டோபரில் பயன்பாட்டிற்கு வருகின்றது!

03 August 2020 அரசியல்
vaccination.jpg

ரஷ்யாவில் கொரோனா நோய்க்கு எதிராக கண்டுபிடிக்க தடுப்பூசியானது, தற்பொழுது முழுமை அடைந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவத்துறை அறிவித்து உள்ளது.

ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் தயாரித்த, கொரோனா தடுப்பூசியின் மீதான பரிசோதனையானது தற்பொழுது முடிந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த நாட்டில் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்ச்சியில் அந்நாட்டு அரசு, வேகமாக செயல்பட்டு வருகின்றது.

இந்த சூழ்நிலையில், ரஷ்யாவில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தானது ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது. அதனை சோதனை செய்யும் முயற்சியானது, நடைபெற்று வந்தன. அதன் முதல் கட்ட சோதனை முதல் கடைசி கட்டச் சோதனை வரை, அனைத்துமே வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த மருந்தால், கொரோனா வைரஸானது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த ஊசியினால் எவ்விதப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

இதனை முன்னிட்டு, இந்த தடுப்பூசியின் முயற்சி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில், இந்த ஊசிக்குரிய ஆவணப் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகள் முடிந்ததும் சர்வதேசத் தரத்தில் தயாரிக்கப்பட்டு, வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS