ரஷ்யா இன்று தன்னுடைய முதல் கொரோனா தடுப்பு மருந்தினை பதிவு செய்ய உள்ளது. இது குறித்து உலகின் பல நாடுகள், பலவிதமாகப் பேசி வருகின்றனர்.
உலகம் முழுக்கப் பரவியுள்ள கொனோரா வைரஸானது, 2 கோடிக்கும் அதிகமானவர்களைப் பாதித்து உள்ளது. இதனால், இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா தற்பொழுது வெற்றி பெற்று உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவில் தடுப்பு மருந்து தயாராகி விட்டது.
என் மகள் உட்படப் பலர் மீது, இந்த மருந்தானது செலுத்தப்பட்டு உள்ளது. விரைவில், நாட்டில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்றுக் கூறியுள்ளார். இந்த மருந்தினை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். இந்த மருந்தானது ஆகஸ்ட் 12ம் தேதி அன்று, பதிவு செய்யப்படுகின்றது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது. இந்த மருந்து சோதனை செய்த பின், பக்க விளைவுகள் ஏற்பட்டதா, எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த மருந்து மனிதர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது எனப் பலக் கேள்விகளை முன் வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், ரஷ்யாவினை நோக்கிப் பல நாடுகள் படையெடுக்கத் தொடங்கி உள்ளன. இந்தியாவின் சார்பில், இந்த மருந்தினை வாங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்த மருந்து சரியாக வேலை செய்யும் பட்சத்தில், கட்டாயம் இந்த மருந்தினை அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பல நாடுகள் வாங்கிப் பயன்படுத்துவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.