ரஷியாவில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு! விரைவில் பதிவு செய்ய ஏற்பாடு!

26 May 2020 அரசியல்
covid19medicine.jpg

உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள, ஊஹான் பகுதியில் இருந்து, பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்பொழுது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 25 லட்சத்திற்கும் அதிகாமானோர் மீண்டு உள்ளனர்.

3,50,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்து என இரண்டையும் கண்டுபிடிக்க, அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஷியாவில் தற்பொழுது கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்து உள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு, இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரஸால் அந்த நாட்டில், 3,500க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த விஷயத்தினை வேகமாகக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ரஷியா தற்பொழுது தீவிரமாக இறங்கி உள்ளது.

அந்த வைரஸிற்கு தற்பொழுது, மருந்து ஒன்றினைக் கண்டறிந்து உள்ளது. பேவிப்பிர்ராவிர் என்ற மருந்தினை ஆர்ப்லீவர் என்றப் பெயரில் கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடித்து உள்ளது. இந்த மருந்தானது, கிட்டத்தட்ட பாதி சோதனைகளைத் தாண்டி, இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளதாக ரஷியாவின் முக்கிய மருத்துவர்களுள் ஒருவரும், விஞ்ஞானியுமான டிமிட்ரி புஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தானது, கொரோனாவைக் குணமாக்கும் மருந்தாகும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள மருந்தானது, தன்னார்வலர்கள் அடங்கிய குழு மீது, பரிசோதிக்க வேண்டி உள்ளது. பின்னர், ரஷியாவின் மாஸ்கோ, செயின்ட்பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட நகரங்களில் பயன்படுத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து, அந்த மருந்து சார்ந்த பதிவு வேலைகளும், நடைபெறும். இன்னும் இந்த மருந்தினை, தீவிர நோய் தொற்று உள்ளவர்கள் மீது, பயன்படுத்தவில்லை. அந்த சோதனையும் நடைபெற்ற பின்னர், பயன்பாட்டிற்கு வந்துவிடும். இந்த செயல்கள் அனைத்தும், அடுத்த எட்டு வாரங்களுக்குள் நடைபெற்று முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

HOT NEWS