உலகிலேயே முதன் முதலாக கொரோனா மருந்தினைப் பதிவு செய்யும் ரஷ்யா!

08 August 2020 அரசியல்
vaccinecovid19.jpg

உலகளவில் முதன் முதலாக, கொரோனாவிற்கு எதிரான மருந்தினை ரஷ்ய அரசு பதிவு செய்ய உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் மிக மோசமான வேகத்தில் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக நாடுகளின் பொருளாதாரமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

சீனா பலமுறை தங்களிடம் கொரோனா மருந்து இறுதிக் கட்டத்தில் உள்ளது எனவும், மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி வருகின்றது. இருப்பினும், இது குறித்த எவ்வித ஆதாரத்தினையும் அந்நாடு சமர்பிக்கவில்லை. ஆனால், ரஷ்யாவும் இங்கிலாந்தும் கொரோனாவிற்கு எதிரான மருந்தினைக் கண்டுபிடித்து, ஆய்வு செய்து வருகின்றனர். இங்கிலாந்து கண்டுபிடித்துள்ள மருந்தானது, கடைசிக் கட்ட ஆய்வில் உள்ளது.

அதே போல் ரஷ்யா உருவாக்கி உள்ள மருந்தானது, தற்பொழுது இறுதிக் கட்ட சோதனையில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தினை சோதித்ததில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த மருந்தால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளது. மேலும், இந்த மருந்தினை, தற்பொழுது பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி அன்று, இந்த மருந்தானது பதிவு செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச தரத்தில் பாதுகாப்பு மற்றும் பரிசோதனையினை செய்யுமாறு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த மருந்து, வெற்றிகரமாக வெளியாகும் பட்சத்தில் உலக மக்களுக்கு நல்லதொரு காலம் பிறக்கும் என்றுக் கூறலாம்.

HOT NEWS