கொரோனா வைரஸிற்கு, ரஷ்ய அரசு தற்பொழுது ஸ்புட்னிக் வி என்ற மருந்தினைக் கண்டுபிடித்து உள்ளது. அதனை தயாரிக்க இந்தியாவினை அழைத்துள்ளது.
உலகம் முழுக்க, கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் இரண்டு கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல நாடுகள் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம், வெற்றிகரமாக கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதற்கு ஸ்புட்னிக் வி எனப் பெயரிட்டும் உள்ளது. இந்த மருந்தினைத் தற்பொழுது உலகளவில் பல நாடுகளும் வாங்குவதற்கு, ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்த மருந்து நம்பகத்தன்மை வாய்ந்ததா என, பல நாடுகள் கேள்வி எழுப்பி உள்ளன. இந்த மருந்தின் மீதான, மூன்றாவது கட்ட சோதனையானது நடத்தப்படவில்லை எனவும், நேரடியாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியது.
இதனை ஆசியாவின் பல நாடுகள் தயாரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும், ஆதலால் தன்னுடைய நட்பு நாடாக இருக்கும் இந்திய அரசு இதனை தயாரக்க வர வேண்டும் என, ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்துத் தகவல் தெரிவித்துள்ள இந்திய சுகாதார நிறுவனம், இந்த மருந்து சிறந்ததா என ஆய்வாளர்களுடன் கலந்தாலோசித்தப் பின்னரே, இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.