எங்கள் நாட்டுக்குள் ஏவுகணை வந்தால் அணுசக்தி தாக்குதல் தான்! ரஷ்யா அதிரடி!

10 August 2020 அரசியல்
missiletestnk.jpg

எங்கள் நாட்டுக்குள் அத்துமீறி எவ்வித ஏவுகணைகள் வந்தாலும், அதற்குப் பதிலடி அளிக்கப்படும் என, ரஷ்யா அதிரடியாக அறிவித்து உள்ளது.

கடந்த வாரம், அமெரிக்க செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில், நீண்ட தூரம் சென்று அங்குள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக, செய்தி வெளியானது. இது நேரடியாக, ரஷ்யாவினைத் தான் குறிக்கின்றது என பலரும் கிசுகிசுக்கத் தொடங்கினர். அதுமட்டுமின்றி, இந்த செய்தியானது நேரடி அச்சுறுத்தலாக ரஷ்யாவால் பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது ரஷ்யாவின் இராணுவ செய்தி நிறுவனமான கிராஸ்னயா ஸ்வெஸ்டாவில் புதிய செய்தி ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதன்படி, ரஷ்யாவிற்குள் அத்துமீறி நுழையும் எந்த ஏவுகணையாக இருந்தாலும், அது அணு ஆயுதத் தாக்குதலாகவேப் பார்க்கப்படும் எனவும், அதற்குரியத் தக்கப் பதிலடியானது கட்டாயம் வழங்கப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதனால், ரஷ்யா நேரடியாக அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளது எனவும், எதிரி நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் பல அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS