ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து! ஸ்புட்னிக் மருந்தின் விலை இவ்வளவு தான்! வியப்பில் நாடுகள்!

25 November 2020 அரசியல்
vladimirputin.jpg

ரஷ்யா நாடானது, கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரித்துள்ள ஸ்புட்னிக் மருந்தின் விலையானது, தற்பொழுது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலக நாடுகள் சுதாரிப்பதற்குள் உலகின் பல நாடுகளுக்கு, இந்த வைரஸ் பரவியது. இதற்கு தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதில், ரஷ்ய நாடானது, உலகிலேயே முதன் முறையாக கொரோனாவிற்கு தடுப்பு மருந்தினை, கண்டுபிடித்து உள்ளது.

இந்த மருந்தானது, இறுதிக் கட்ட ஆய்வில் 92% வெற்றியினைப் பெற்றுள்ளதாகவும், இதனை தற்பொழுது தன்னுடைய மக்களுக்கு வழங்கி வருவதாகவும், ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த மருந்தின் முதல் தயாரிப்பானது, ஒரு லட்சத்து 17 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்பட்டு, மருத்துவ சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சூழலில், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு கோடி டோஸ் மருந்துகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது ரஷ்யா. தற்பொழுது ரஷ்யாவிற்கு போட்டியாக, அமெரிக்காவின் பிபிசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் புதிய மருந்துகளைத் தயாரித்து உள்ளன.

அவை 90% வெற்றியினை உறுதி செய்துள்ளனர். இது குறித்து, ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், அமெரிக்காவின் நிறுவனங்கள் தயாரித்துள்ளதைப் போல, ஸ்புட்னிக் மருந்தானது அதே தரத்துடன் உள்ளது எனவும், ஆனால், அமெரிக்காவின் மருந்துகளை விட, இரண்டு மடங்குக்கும் கீழாகவே இதன் விலை உள்ளது எனத் தெரிவித்து உள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஒரு டோஸின் விலையானது, 750 ரூபாயாகும்.

ஒவ்வொரு நபரும், தகுந்தக் கால இடைவெளியில், ஸ்புட்னிக் வி மருந்தினை இரண்டு முறை எடுத்துக் கொள்வதன் மூலம், கொரோனா பாதிப்பில் இருந்து, தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS