இந்தியாவிற்கு வரும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி! விரைவில் பரிசோதனை ஆரம்பம்!

16 November 2020 அரசியல்
coronatestsample.jpg

ரஷ்யாவில் கொரோனா வைரஸிற்கு எதிராக உருவாக்கப்பட தடுப்பூசியானது, விரைவில் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வர உள்ளது.

உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற, கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல முன்னணி நாடுகளும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில், ரஷ்ய அரசு வெற்றி பெற்றது. அதன் அதிபர் புதின் இது குறித்து கூறுகையில், தங்கள் நாட்டில் ஸ்புட்னிக் வி என்ற மருந்தினைக் கண்டுபிடித்துள்ளதாகவும், இந்த மருந்தானது, கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.

மேலும், தற்பொழுது ரஷ்ய அரசு தன்னுடைய மக்களுக்கு இந்த ஊசியினை செலுத்தி வருகின்றது. இந்த சூழலில் 100 கோடி மருந்து டோஸ்களுக்கும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், ரஷ்ய அரசு தெரிவிக்கின்றது. இந்த சூழலில், இந்தியாவில் ஏற்கனவே இந்த மருந்தின் மீதான முதற்கட்ட சோதனையானது, வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சூழலில், 2வது மூன்றாவது கட்ட பரிசோதனைக்காக இந்த மருந்தானது, இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மருந்தின் மீதான சோதனைக்கு, டாக்டர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனமானது, மத்திய சுகாதாரத் துறையிடம் முறைப்படி, ஏற்கனவே அனுமதி பெற்று உள்ளது. கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு, அடுத்த வாரம் இந்த மருந்து கொண்டு வரப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த மருந்தானது, அங்கு வருகின்ற தன்னார்வலர்களிடம் பரிசோதனை செய்யப்படும்.

HOT NEWS