ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது என, உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸானது நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் மூன்று கோடியே பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்றில் இருந்து இரண்டு கோடியே 20 லட்சம் பேர் மீண்டு உள்ளனர். 10 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ரஷ்ய அரசு ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியினைக் கண்டுபிடித்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடீன் இதனைத் தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகளுக்கும் இந்த மருந்தினை செலுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த மருந்து எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என தெரியாது என, உலக சுகாதார மையம் தெரிவித்து வந்தது.
இந்த மருந்தினை பரிசோதிக்க வேண்டி உள்ளது எனவும் கூறியிருந்தது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது இது குறித்த அறிவிப்பினை அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கொரோனா வைரஸிற்காக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 என்ற மருந்தானது மிகவும் பாதுகாப்பானது எனவும், இந்த மருந்தால் கொரோனா வைரஸ் பரவல் உடலில் குறைகின்றது எனவும், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்த மருந்திற்கு 120 டோஸ் ஆர்டர் வந்துள்ளதாக, ரஷ்யா தெரிவித்து உள்ளது.