ரஷ்யாவும் அமெரிக்காவும் அனைத்து விஷயங்களிலும், ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு செயல்படுவது என்பது வாடிக்கையான விஷயமாகும். ஆனால், அனைவருக்கும் மேலாக தற்பொழுது ரஷ்யா புதியதாக ஏவுகணை ஒன்றினை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
உலகளவில் தற்பொழுது பெரிய அளவில் தலைவலியாக மாறி வரும் விஷயம் என்றால், அது செயற்கைக்கோள்கள் தான். இந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, எதிரி நாட்டினை உளவு பார்க்கும் செயல்களில், பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், அதனை தடுக்கும் பொருட்டு, அத்தகைய செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணைகளானது தற்பொழுது பல நாடுகள் உருவாக்கி வருகின்றன.
இந்தியா ஏற்கனவே, இது போன்ற ஏவுகணையினை உருவாக்கி உள்ளது. 14Ts033 என்ற ஏவுகணையினை வெற்றிகரமாக சோதித்தும் உள்ளது. இந்த ஏவுகணையினை வைத்து, புவி வட்டப் பாதையின் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டு, உளவு பார்க்கின்ற செயற்கைக்கோள்களை எளிதாக அழிக்க இயலும். மேலும், இதனைக் கொண்டு அமெரிக்காவின் எந்த இடத்தினையும் தாக்கி அழிக்க இயலும்.
மணிக்கு 9,600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணையால், உலகின் பல நாடுகளும் தற்பொழுது அச்சம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.