அவிபாவிர் மருந்து மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்கு வந்தது! ரஷ்யா அதிரடி!

12 June 2020 அரசியல்
avafavir.jpg

ரஷ்யாவில் கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்து உருவாக்கப்பட்டு, தற்பொழுது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

உலகளவில் பரவி வருகின்ற கொரோனா வைரஸால், தற்பொழுது உலகமே மிகப் பெரிய அளவில் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவிபாவிர் (Avifavir) என்ற மருந்தினை, அந்த நாட்டின் கெம்ரார் என்ற நிறுவனத்துடன் இணைந்து ரஷ்யா உருவாக்கி உள்ளது. இந்த மருந்தானது அடுத்த எட்டு வாரங்களுக்குள், பயன்பாட்டிற்கு வரும் என அந்நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்தனர். ஆனால், தொடர்ந்து இந்த வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தற்பொழுது அந்த மருந்தினைப் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இன்று முதல், ரஷ்யாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மருந்தானது அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த மருந்திற்கு ரஷிய சுகாதாரத்துறை அனுமதியும், அங்கீகாரமும் வழங்கி உள்ளது. இதனை ஒவ்வொரு மாதமும் 60,000 பேருக்கு சிகிச்சைக்காக உருவாக்க, ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.

இந்த மருந்து குறித்துப் பேசியுள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், தற்பொழுது வரை 10க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மருந்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மருந்தின் செயல்பாட்டினைப் பொருத்து, இதன் தயாரிப்புப் பணிகள் அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

HOT NEWS