அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் துருக்கி மீது கோபம்!

16 October 2019 அரசியல்
syriantroops.jpg

சிரியாவின் வடக்குப் பகுதியினை கைவசம் வைத்துள்ள, குர்த் படையினர் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால், கடுமையானப் பொருளாதாரத் தடையினை சந்திக்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துருக்கி அதிபர் எர்டோகனை தொலைபேசியில் அழைத்து எச்சரித்தார்.

இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து, குர்த் இன மக்கள் மீது, தாக்குதல் நடத்தி வருகின்றது துருக்கிப் படை. அமெரிக்கா இதில், ஆர்வம் காட்டுவதற்கு ஒரு காரணம் உள்ளது. சிரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும், ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளை அழிக்க, இந்த குர்த் படையினரை பயன்படுத்தி வந்தது அமெரிக்கா. அவர்களுக்காக, தங்களுடையப் படையினை அங்கிருந்து திரும்பவும் பெற்றது.

அமெரிக்கப் படைகள், திரும்பப் பெற்றவுடனேயே, துருக்கி இராணுவம் குர்த் படையினரைத் தாக்க ஆரம்பித்தனர். மேலும், சிரியாவின் எல்லைப் பகுதிகளை நெருங்கி வரும் துருக்கி இராணுவம், அங்கு நீண்ட காலம் இருக்க முடியாது என்பதை உணர்ந்து தான் உள்ளது. இருப்பினும், தீவிரவாதத்தையும், சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தையும் காரணம் காட்டித் தாக்குதல் நடத்தி வருகின்றது.

அமெரிக்கா தன்னுடையப் படைகளைத் திரும்பப் பெற்றாலும், அங்கு இன்னும் ஒரு சில அமெரிக்கப் பாதுகாப்புக் குழுக்கள் உள்ளன. அவைகளுக்கு, துருக்கி இராணுவம் அச்சுறுத்தலாக இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால், ஆயுதம் தாங்கிய விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அமெரிக்கா தற்பொழுது, அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இதனிடையே, அங்கு உள்ள சிரியாவிற்கான ரஷ்ய தூதர் கூறுகையில், இனி சிரியாவின் மீது துருக்கியின் தாக்குதலைப் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம் எனக் கூறியுள்ளார். இதனால், அப்பகுதியில் மீண்டும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையையும் பொருட்தவில்லை என்பதால், துருக்கியின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையினைக் கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS