கடந்த வாரம் சஹோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் பிரபாஸ் பாகுபலி படங்களுக்குப் பிறகு, இப்படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மிகப் பெரிய பொருட்செலவில் தான் இப்படத்தினையும் உருவாக்கினர்.
சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இபடம் எடுக்கப்பட்டதாக, இப்படத்தினை தயாரிக்கும் யூவி கிரியேசன்ஸ் வெளிப்படையாகக் கூறியது. இந்நிலையில், இப்படம் கடந்த வாரம் வெளியானது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் ப்ரீ புக்கிங் மூலம், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால், முதல் நாள் வசூலுக்குப் பாதிப்பில்லை. இருப்பினும், இப்படத்தின் இரண்டாம் நாள் முதல், தியேட்டரில் கூட்டம் குறைய ஆரம்பித்தது. தெலுங்கு மொழியைத் தவிர்த்து, மற்ற மொழிகளில் இப்படம் அவரேஜ் என்ற லெவலுக்கும் கீழ் தான் உள்ளது.
டிக்கெட் எடுத்துவிட்டோம், வேறு வழியில்லை, பார்த்துத் தொலைவோம் எனப் பார்ப்பவர்களே அதிகம். அப்படித் தான் இந்தப் படத்தினையும் பார்த்து வருகின்றனர். அப்படி ஒரு திரைக் காவியத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.
இதனிடையே இப்படம், மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளதாக, பல திரை விமர்சகர்களும் கதை சொல்ல ஆரம்பித்தனர். இதனிடையே இதனை நிரூபிக்கும் வகையில், இப்படம் ஐந்து நாட்களில், சுமார் 350 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக, அப்படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனால், நடிகர் பிரபாஸின் ரசிகர்கள், உற்சாகத்தில் உள்ளனர்.