சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்! விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

04 February 2020 அரசியல்
sabarimalai.jpg

சபரிமலைக்குள், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தின் சீராய்வு மனுக்கள் மீது, நாங்கள் விசாரிக்க முடியாது என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சபரிமலைக்குச் செல்ல பல சமூக ஆர்வலர்களும், பெண்களும் முயற்சிகள் செய்தனர். இருப்பினும், அவர்களை பெரும்பாலும் ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கவில்லை.

அந்தக் கோயிலின் வழக்கப்படி, 10 முதல் 50 வயதுடைய பெண்கள், கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவால், அனைத்து வயதுப் பெண்களும் அந்த கோயிலுக்குச் செல்ல இயலும். இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவின் பந்தள அரண்மனை சார்பில், சீராய்வு மனு சமர்பிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். மத நடவடிக்கைகளில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே, நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில், ஏற்கனவே தீர்ப்பு கூறப்பட்டு விட்டது. எனவே, இந்த சீராய்வு மனுவின் அளவும் மிகக் குறுகியது தான். எனவே, இந்த மனுவினை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். இதில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது.

அதே சமயம், இந்த வழக்கின் மூலம், மத நம்பிக்கைகளுக்குள் எவ்வளவு தூரம், நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என தற்பொழுது நிர்ணயிக்க, வழக்கறிஞர்கள் ஒரு மனதாக செயல்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதனால், இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

HOT NEWS